[HOME.gif][MP3+SONGS.gif][TAMIL+KARAOKE.gif][KARAOKE+VIDEO.gif][TAMIL+REMIX.gif][TAMIL+LYRICS+1.gif][TAMIL+POP.gif]
Latest Tamil Lyrics : Velayutham / Mankatha

Monday, August 29, 2011

வேலாயுதம் பாடல் வரிகள்

1. ரத்தத்தின் ரத்தமே பாடல் வரிகள் - வேலாயுதம் பாடல் வரிகள்

(ஆண்)
ரத்தத்தின்... ரத்தமே... என் இனிய உடன் பிறப்பே...
சொந்தத்தின்... சொந்தமே... நான் இயங்கும் உயிர் துடிப்பே...
அம்மாவும் , அப்பாவும் எல்லாமே நீ தானே
என் வாழ்க்கை உனக்கல்லவா...
செத்தாலும் புதைத்தாலும் , செடியாக முளைத்தாலும்
என் வாசம் உனக்கல்லவா ...
ரத்தத்தின்... ரத்தமே... என் இனிய உடன் பிறப்பே...
சொந்தத்தின்... சொந்தமே... நான் இயங்கும் உயிர் துடிப்பே...

(ஆண்)
அன்பென்ற ஒற்றை சொல்லை போலுன்று வேறில்லை
நீ காட்டும் பாசத்துக்கு தெய்வங்கள் ஈடு இல்லை
என் நெஞ்சம் உன்னை மட்டும் கடிகார முள்ளாய் சுத்தும்
நொடி நேரம் நீ பிரிந்தால் அம்மாடி உயிரே போகும்
நீ சொன்னால் எதையும் செய்வேன், தலை ஆட்டும் பொம்மை ஆவேன்
செத்தாலும் புதைந்தாலும், செடியாக முளைத்தாலும்
என் வாசம் உனக்கல்லவா...
ஓஓஓ.. ஓஓ.. ஒ...
ஓஓஓ.. ஓஓ.. ஒ...
ஓஓஓ.. ஓஓ.. ஒ...
ஓஓஓ.. ஓஓ.. ஒ..
ரத்தத்தின்... ரத்தமே... என் இனிய உடன் பிறப்பே...
சொந்தத்தின்... சொந்தமே... நான் இயங்கும் உயிர் துடிப்பே...

(குழு)
நீங்க ரொம்ப நாளு நல்லா இருக்கணும்
இதே மாதிரி , ரொம்ப நாளு நல்லா இருக்கணும்
நூறு புள்ள பெத்து கோடி அன்பு சேர்த்து
நீங்க வாழணும் சந்தோஷமா...
இந்த ஜோடி போல, ஜோடி இல்ல என்று
வாழ்ந்து காட்டணும் சந்தோஷமா...

(ஆண்)
தாஜ்மஹால் உனக்கு தங்கத்தில் கட்ட போறேன்
மேகத்தில் நூலெடுத்து சேல நான் நெஞ்சி தாறேன்
(பெண்)
வீட்டோட நீ இருந்தா வேறேதும் ஈடாகுமா
கண்டாங்கி சேல போதும் வேறேதும் நான் கேட்பேனா
(ஆண்)
வானத்தில் நீலம் போல பூமிக்குள் ஈரம் போலே
(பெண்)
பிரித்தாலும் பிரியாது, முறித்தலும் முறியாது
நாம் கொண்ட உறவல்லவா...
ஓஓஓ.. ஓஓ.. ஒ...
ஓஓஓ.. ஓஓ.. ஒ...
ஓஓஓ.. ஓஓ.. ஒ...
ஓஓஓ.. ஓஓ.. ஒ..
ம்ம் ம்ம்ம் ம்ம்ம்...

No comments:

Post a Comment