[HOME.gif][MP3+SONGS.gif][TAMIL+KARAOKE.gif][KARAOKE+VIDEO.gif][TAMIL+REMIX.gif][TAMIL+LYRICS+1.gif][TAMIL+POP.gif]
Latest Tamil Lyrics : Velayutham / Mankatha

Wednesday, September 23, 2009

Peraanmai

1. Kaatu Puli Adichu Lyrics - Peranmai Lyrics

Kaattu Puli Adichu kaatu raasaa Vaaraan Vaaraan da
Veetukku Oruthan Vanthu Vetri Maala Podunga Podunga da
Namma Kadavul Porakum munne Intha kaaddukku Vanthavuga
Pala Kaatu Vilanga jeyichu inga kanchi kudichavunga
Iyarkai thaaiyin Sarakku ada Enga udampula iruku
Mala Thanni, Thenu rendum emakku Thaai paal thanthuruku
Yemmaa o my yemma
Yemmaa o my yemma
Yemmaa o my yemma
Yemmaa o my yemma

Kattu Puli Adichu kaatu raasaa Vaaraan Vaaraan da
Veetukku Oruthan Vanthu Vetri Maala Podunga Podunga da

vilaiyadu thulli paadu,
Intha Kaadu, enga Veedu
Antha malayai Pudunga
Malaya Pudunga
Anga Maranga kurainga
Maranga kurainga
Inga Kadavul Boominga
Kadavul Boominga
Anga Nadhigal Saaminga

Kaathu Kaninga Yenga virunthu, suttha kaatthu enga marunthu
Naanga mannula kedakkom aana azhuku padala
Enga moochi Puliya oru pugaiyum thodalla

Mannuku Naanga Yaarum Uram poadavilla
Kaathu manithar irupathaala Uram pokavilla

pothu Udaimai samuthaayam tholainthu pogavilla
naanga paravaikum vilangukum pangam marutthathilla

Yemmaa o my yemma
Yemmaa o my yemma
Yemmaa o my yemma
Yemmaa o my yemma

Kattu Puli Adichu kaatu raasaa Vaaraan Vaaraan da

Ooo.. Malai naadu Thani naadu
Enga veedu Oru koodu
Inga Kaathum Thanniyum innum Kalanga Padalla
Intha pacha Mannula Vera Paatham Padalla
Enga Polappu Intha Kaadu, Enga Udambu muthaleedu
Intha Mannin Vayasu, Enga Manusan Vayasu
Intha Malayin Manasu, Enga Manusan Manasu
theiyilai Maram aakum atha valarpathillai
sigarathil irunthaalum naanga Valaravilla….

Kadavulukum engalukkum pechuvaarthai illai
Enga kaikalai pol engalukku moolathanam illa

Yemmaa o my yemma
yemmaa o my yemma
Yemmaa o my yemma
yemmaa o my yemma
Yemmaa o my yemma
yemmaa o my yemma
Yemmaa o my yemma
yemmaa o my yemma


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


1. காட்டு புலி அடிச்சு பாடல் வரிகள்

காட்டு புலி அடிச்சு காட்டு ராசா வாறான் வாறான் டா
வீட்டுக்கு ஒருத்தன் வந்து வெற்றி மால போடுங்க போடுங்க டா
நம்ம கடவுள் பொறக்கும் முன்னே இந்த காட்டுக்கு வந்தவுக
பல காட்டு விலங்க ஜெயிச்சு இங்க கஞ்சி குடிச்சவுங்க
இயற்கை தாயின் சரக்கு அட எங்க உடம்புல இருக்கு
மல தண்ணி, தேனு ரெண்டும் எமக்கு தாய் பால் தந்துருக்கு
ஏம்மா.. ஒ மை எம்மா
ஏம்மா.. ஒ மை எம்மா
ஏம்மா.. ஒ மை எம்மா
ஏம்மா.. ஒ மை எம்மா

காட்டு புலி அடிச்சு காட்டு ராஸா வாறான் வாறான் டா
வீட்டுக்கு ஒருத்தன் வந்து வெற்றி மால போடுங்க போடுங்க டா

விளையாடு துள்ளி பாடு,
இந்த காடு, எங்க வீடு
அந்த மலையை புடுங்க
மலய புடுங்க
அங்க மரங்க குறைங்க
மரங்க குறைங்க
இங்க கடவுள் பூமிங்க
கடவுள் பூமிங்க
அங்க நதிகள் சாமிங்க

காத்து கனிங்க எங்க விருந்து , சுத்த காத்து எங்க மருந்து
நாங்க மண்ணுல கெடக்கோம் ஆன அழுக்கு படல
எங்க மூச்சி புளிய ஒரு புகையும் தொடல்ல

மண்ணுக்கு நாங்க யாரும் உரம் போடவில்லை
காத்து மனிதர் இருப்பதால உரம் போகவில்ல

பொது உடைமை சமுதாயம் தொலைந்து போகவில்ல
நாங்க பறவைக்கும் விலங்குக்கும் பங்கம் மறுத்ததில்ல

ஏம்மா.. ஒ மை எம்மா
ஏம்மா.. ஒ மை எம்மா
ஏம்மா.. ஒ மை எம்மா
ஏம்மா.. ஒ மை எம்மா

காட்டு புலி அடிச்சு காட்டு ராஸா வாறான் வாறான் டா

ஓ.. மலை நாடு தனி நாடு
எங்க வீடு ஒரு கூடு
இங்க காத்தும் தண்ணியும் இன்னும் களங்க படல்ல
இந்த பச்ச மண்ணுல வேற பாதம் படல்ல
எங்க பொளப்பு இந்த காடு, எங்க உடம்பு முதலீடு
இந்த மண்ணின் வயசு, எங்க மனுஷன் வயசு
இந்த மலையின் மனசு, எங்க மனுஷன் மனசு
தேயிலை மரம் ஆகும் அத வளர்ப்பதில்லை
சிகரத்தில் இருந்தாலும் நாங்க வளரவில்ல ….

கடவுளுக்கும் எங்களுக்கும் பேச்சுவார்த்தை இல்லை
எங்க கைகளை போல் எங்களுக்கு மூலதனம் இல்ல

ஏம்மா.. ஒ மை எம்மா
ஏம்மா.. ஒ மை எம்மா
ஏம்மா.. ஒ மை எம்மா
ஏம்மா.. ஒ மை எம்மா
ஏம்மா.. ஒ மை எம்மா
ஏம்மா.. ஒ மை எம்மா
ஏம்மா.. ஒ மை எம்மா
ஏம்மா.. ஒ மை எம்மா

************************************************************************
www.isaivirunthu.blogspot.com
************************************************************************

2. Kaadu Kalai Katta Lyrics

Kaadu Kalai katta,
Thiru naadu Kodi katta,
Kadal Yeelum Kai Thatta Pagai mudikavaa

Vaanam Kalai katta, karumegam idi kotta
Puyal Veegam uyir mutta, Thalai arukkava

Theem tom thom thalaikalai
Theem thom uyirkalai
Vaar thom thom pazhiyinai mudikavaa..

Theem tom thom thalaikalai
Theem thom uyirkalai
Vaar thom thom pazhiyinai mudikavaa..

Ivan ivan ivan eluvathu
Eman eman eman thalai ithu
Idi idi idi idipathai
Evan evan evan thadupathu
vilippudan munnerida
Ezhippudan ennavathu
Valai karam vil yenthida
Padai pulan ennavathu

Padaika, udaika, padikka, namaika, vathaikka, mudika
sikathile thee mootu
vanathile por paatu
yeduthatai niraivettu
irappilum thaalattu
maanam,maanam,maanam athu palaiyathu
Veeram , veeram, veeram ithu puthiyathu
Maanam kaakum pothu
Uyir therithalathe

Kodum pagai alinthathe
nenje kondaadi aadu
Kadum pazhi olinthathe
Penne ennodu padu

Kodum pahai azhinthathe
Nenjae kondadi aadu
Kadum pazhi olinthathe
Penne ennodu paadu


Vellodai yaavum rettham
ventraahi aachu yuttham
seenthoodi pochu acham
Jayam jayam en uccham
Nam kobam valartha theeiyile
Isai kaanam varudi pochu
En pinnal koonthal mudika
Ithu Innor baratham aachu

Kodum pahai azhinthathe
Nenjae kondadi aadu
Kadum pazhi olinthathe
Penne ennodu paadu

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

2. காடு களை கட்ட பாடல் வரிகள்

காடு களை கட்ட,
திரு நாடு கொடி கட்ட,
கடல் ஏழும் கை தட்ட பகை முடிக்கவா

வானம் களை கட்ட, கருமேகம் இடி கொட்ட
புயல் வேகம் உயிர் முட்ட , தலை அறுக்கவா

தீம் தோம் தோம் தலைகளை
தீம் தோம் உயிர்களை
வார் தோம் தோம் பழியினை முடிக்கவா..

தீம் தோம் தோம் தலைகளை
தீம் தோம் உயிர்களை
வார் தோம் தோம் பழியினை முடிக்கவா..

இவன் இவன் இவன் எழுவது
எமன் எமன் எமன் தலை இது
இடி இடி இடி இடிப்பதை
எவன் எவன் எவன் தடுப்பது
விழிப்புடன் முன்னேறிட
எழிப்புடன் என்னாவது
வளை கரம் வில் ஏந்திட
படை புலன் என்னாவது

படைக்க , உடைக்க , படிக்க, நமைக்க , வதைக்க , முடிக்க
சிகத்திலே தீ மூட்டு
வனத்திலே போர் பாடு
எடுத்ததை நிறைவேற்று
இறப்பிலும் தாலாட்டு
மானம் ,மானம்,மானம் அது பழையது
வீரம் , வீரம், வீரம் இது புதியது
மானம் காக்கும் போது
உயிர் தெரிதலதே

கொடும் பகை அழிந்ததே
நெஞ்சே கொண்டாடி ஆடு
கடும் பழி ஒழிந்ததே
பெண்ணே என்னோடு பாடு

கொடும் பகை அழிந்ததே
நெஞ்சே கொண்டாடி ஆடு
கடும் பழி ஒழிந்ததே
பெண்ணே என்னோடு பாடு


வெள்ளோடை யாவும் ரெத்தம்
வென்றாகி ஆச்சு யுத்தம்
செந்தோடி போச்சு அச்சம்
ஜெயம் ஜெயம் என் உச்சம்
நம் கோபம் வளர்த்த தீயிலே
இசை கானம் வருடி போச்சு
என் பின்னல் கூந்தல் முடிக்க
இது இன்னோர் பாரதம் ஆச்சு


கொடும் பகை அழிந்ததே
நெஞ்சே கொண்டாடி ஆடு
கடும் பழி ஒழிந்ததே
பெண்ணே என்னோடு பாடு

***************************************************************
www.isaivirunthu.blogspot.com
***************************************************************

3. Erathazha Ezhumani Lyrics

Erathazha Ezhumani
En imayai Parithu sendraai
Erathazha Ezhumani
En imayai Parithu sendraai

Imayai tiruppi keten
Imayai tiruppi koduthu
En Kangal parithu sentraai
Kangal tiruppi keten
Kangal tiruppi koduthu
En idhyam parithu sentraai
Yetho ontru parikaamal
Iruka mudiyaathu unnal
Yetho ontrai ilakaamall
Iruka mudiyaathu ennal
Erathazha Ezhumani
En imayai Parithu sendraai

Kaadhal vanthathum paranthu parthen
Vaanam oruthuli minjavillai….
Vaakiyam yellam koodi kaliyuthu
Vaarthai yethum minjavillai
Azhage unnai nerungum pothu
aasai yethum minjavillai
Anbe unnai nenaithu paduthaal
Aadai yethum minjavillai
minjiyathu ellam….
Kelvi ontru thaan
Kaadhal seithu setthu poovatha
Setthu konde kaadhal seivathaa
Erathazha Ezhumani
En imayai Parithu sendraai

aanukulle itthanai ulagam
Unnai kandathum vidai arinthen….
Pennukule yethanai pookal
Ennai tottatum vidai arinthen.
Thudikum vinmeen ethanaio
Thoongaa iravil vidai arinthen
Kottum Mazhaithuli ethanaiyo
Kotta vilika vidai arinthen
Vidaiyum theriyaa kelvi ondru thaan
Kaadhal seithu setthu poovathaa
Setthu konde kaadhal seivathaa
Mmm hmm En imayai Parithu sendraai

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

3. ஏறத்தாழ எழுமணி பாடல் வரிகள்

ஏறத்தாழ எழுமணி
என் இமையை பறித்து சென்றாய்
ஏறத்தாழ எழுமணி
என் இமையை பறித்து சென்றாய்

இமையை திருப்பி கேட்டேன்
இமையை திருப்பி கொடுத்து
என் கண்கள் பறித்து சென்றாய்
கண்கள் திருப்பி கேட்டேன்
கண்கள் திருப்பி கொடுத்து
என் இதயம் பறித்து சென்றாய்
ஏதோ ஒன்று பறிக்காமல்
இருக்க முடியாது உன்னால்
ஏதோ ஒன்றை இழக்காமல்
இருக்க முடியாது என்னால்
ஏறத்தாழ எழுமணி
என் இமையை பறித்து சென்றாய்

காதல் வந்ததும் பறந்து பாத்தேன்
வானம் ஒருதுளி மிஞ்சவில்லை ….
வாக்கியம் எல்லாம் கூடி கலயுது
வார்த்தை ஏதும் மிஞ்சவில்லை
அழகே உன்னை நெருங்கும் போது
ஆசை ஏதும் மிஞ்சவில்லை
அன்பே உன்னை நினைத்து படுத்தால்
ஆடை ஏதும் மிஞ்சவில்லை
மிஞ்சியது எல்லாம்….
கேள்வி ஒன்று தான்
காதல் செய்து செத்து போவதா
செத்து கொண்டே காதல் செய்வதா
ஏறத்தாழ எழுமணி
என் இமையை பறித்து சென்றாய்

ஆணுக்குள்ளே இத்தனை உலகம்
உன்னை கண்டதும் விடை அறிந்தேன் ….
பெண்ணுக்குளே எத்தனை பூக்கள்
என்னை தொட்டதும் விடை அறிந்தேன்.
துடிக்கும் விண்மீன் எத்தனையோ
தூங்கா இரவில் விடை அறிந்தேன்
கொட்டும் மழைத்துளி எத்தனையோ
கொட்ட விளிக்க விடை அறிந்தேன்
விடையும் தெரியா கேள்வி ஒன்று தான்
காதல் செய்து செத்து போவதா
செத்து கொண்டே காதல் செய்வதா
ம்ம்ம் ஹ்ம்ம் என் இமையை பறித்து சென்றாய்


4. Thuppaki penne soodana kanne Song Lyrics

Thuppaki penne soodana kanne
Ulagam piranthathu unakkaga
Naalaiku ulagam yaaruku sontham
Intraiku vaalvom namakkaga
Kaatrai thaan nirka soll, aatraiyum nirkka soll
Kuil mattum paada soll
Happy birthday

Thuppaki penne soodana kanne
Ulagam piranthathu unakkaga
Naalaiku ulagam yaaruku sontham
Intraiku vaalvom namakkaga

Idhiyam paatisaika
Ilamai aarparika
Un azhaka ha ha ha
Poothaada….

Idhiyam paatisaika
Ilamai aarparika
Un azhaka ha ha ha
Poothaada….

Kuchipudi mattum alla de de
kungfu paiytum kattrukollade de
Thaali katta matum allade de
Aalvatharkum kattru kollade de
Nee thuli alla malar yentru
Pooraadu…..penne

Thuppaki penne soodana kanne
Ulagam piranthathu unakkaga
Naalaiku ulagam yaaruku sontham
Intraiku vaalvom namakkaga

ethirthaal pugai olipom
mithithal por thodupom
Jeens anintha sittukuruvi vi
sirakadithu vinnai velladi di
Paatti kattum pattu sealaiyai yai
museathil vaika solladi de
Puthu veetil puthu vaazhkai kondaadu kanne


4. துப்பாக்கி பெண்ணே சூடான கண்ணே பாடல் வரிகள்

துப்பாக்கி பெண்ணே சூடான கண்ணே
உலகம் பிறந்தது உனக்காக
நாளைக்கு உலகம் யாருக்கு சொந்தம்
இன்றைக்கு வாழ்வோம் நமக்காக
காற்றை தான் நிற்க சொல் ஆற்றையும் நிக்க சொல்
குயில் மட்டும் பாட சொல்
ஹாப்பி பர்த்டே

துப்பாக்கி பெண்ணே சூடான கண்ணே
உலகம் பிறந்தது உனக்காக
நாளைக்கு உலகம் யாருக்கு சொந்தம்
இன்றைக்கு வாழ்வோம் நமக்காக

இதயம் பாட்டிசைக்க
இளமை ஆர்பரிக்க
உன் அழக ஹ ஹஹ
பூத்தாட ட ….

குச்சிபுடி மட்டும் அல்லடி டி
குங்பு பைய்டும் கற்றுகொள்ளடி டி
தாலி கட்ட மட்டும் அல்லடி டி
ஆள்வதற்கும் கற்று கொள்ளடி டி
நீ துளி அல்ல மலர் என்று
போராடு …..பெண்ணே

துப்பாக்கி பெண்ணே சூடான கண்ணே
உலகம் பிறந்தது உனக்காக
நாளைக்கு உலகம் யாருக்கு சொந்தம்
இன்றைக்கு வாழ்வோம் நமக்காக

எதிர்த்தால் புகை ஒழிப்போம்
மிதித்தல் போர் தொடுப்போம்
ஜீன்ஸ் அணிந்த சிட்டுகுருவி வி
சிறகடித்து விண்ணை வெல்லடி டி
பாட்டி கட்டும் பட்டு சீலையை யை
மியுசியத்தில் வைக்க சொல்லடி டி
புது வீட்டில் புது வாழ்கை கொண்டாடு கண்ணே

1 comment: